தமிழ்ப் பெண்ணழகு..
கார்மேகங் கூந்தல் தன்னில்,
கரு வானக் குழலி கண்ணில்,
காய்ந்தாடும் நிலவின் நிலை தாம்,
சாய்ந்தாடும் அப்பூவின் நிலையாம்..
வளைந்த இடை,
வடித்த நடை,
கொடி நடை நடந்தாளே,
கோடி சலனம் நெஞ்சினுள்ளே..
வெள்ளை வானில்,
விளையாடிடுதே கருவிழிகள்,
வீரியம் கொண்ட விழியிரண்டும்,
வாள் வீசி சாய்த்திடுதே..
சாயமில்லா பற்கள் தனை,
செவ்விதழ் சிறை வைக்க,
உதட்டுச் சாயம் சிவப்பதுவோ,
உன் உதட்டுச் சிவப்பின் நிறம் தொட்டோ..
வானவில்லை எட்டிப் பிடித்து,
வண்ணம் தீட்டி கருப்படித்து,
வில்லின் வடிவப் புருவந்தன்னை ,
விழியன் மேலே வைத்தவன் யாரோ..!!