பேருந்துப் பயணம் ஒன்றில்...!
பேருந்துப் பயணத்தில்
என் அருகே
தூங்கிய குழந்தையைத்
தாங்கி அமர்ந்திருக்கும்
தந்தையார் !
தூங்கிய குழந்தையின்
காலடிகள் என் மடியில் !
தொந்தரவென்று
சங்கடப்பட்டார் தந்தை !
"கொடுப்பினை இது!" என்று
சந்தோசப்பட்டேன் நான் !