குமரனும், குமாரனும்.
குமரனும், குமாரனும்
ஒன்றே.
மரத்தண்டு டனும்,முழத்துண்டுடனும்
இருத்தலாலும்,
பாரத்தோடு மலையேறியதாலும்,
அஞ்சுதலை அழித்ததாலும்,
ஆறுதலை கொண்டிருப்பதாலும்,
தேவாணையோடுவாழ்ந்ததாலும்,
இம்மண்ணுவேலன்என்பதாலும்,
குமரனும் குமாரனும் ஒன்றே
எனக்கொள்.
J G ரூபன்
05/10/11
பொருள் விளக்கம்
இயேசுவிற்கு சிலுவைமரமும்,
இடையாடையும், சிலுவை சுமந்ததும்,
பயத்தை
அழித்து ஆறுதல்
தந்ததும்,
இறைஆணையை வாழ்வில் கொண்டதா
லும்,
இமானுவேல் என்றதாலும்,
முருகனுக்கு
தடியும், கோமனத்துடனும்,
மனபாரத்துடன் மலையேறியதாலும்,
ஆறு தலைகளைகொண்டு அஞ்சற்க
என்றதாலும், தேவ யானையை
மணந்ததும், இம்மண் வேலன் என்றதாலும்
இருவரும் ஒன்றே என உணர்ந்தேன்