கதையல்ல நிஜம் ...... (1)

தெரிந்து கொள்ளுங்கள் ..

ஒரு புத்தகத்தை படித்துப்பார்
கடந்தக்காலத்தை தெரிந்துக்கொள்வாய்
தினமும் செய்தித்தாளை படித்துப்பார்
நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும்
-தெரிந்துக்கொள்வாய்
எழுதியவர் :இரா.மோகனசுந்தரி
நாள் :2013-01-19 11:28:44
Added by :r.mohanasundari
பார்வை :22
********************************************
இன்று நீண்ட நாள் தொடர்பில் இல்லாத / தொடர்பு கொள்ள முடியாத ஒரு எழுத்து நண்பரை அலைபேசியில் அழைக்க முயன்றேன் முதல் மூன்று முறை தோல்வி தான் :

பிறகு மேல உள்ள தெரிந்து கொள்ளுங்கள் என்ற படைப்பை பார்த்தேன்

"ஒரு புத்தகத்தை படித்துப்பார்
கடந்தக்காலத்தை தெரிந்துக்கொள்வாய்"

ஆம் நிச்சயம், *** யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்" பன்னாட்டு படைப்பாளிகளின் தொகுப்பு - இலக்கிய முரசு அகன் ஐய்யா அவர்களின் பெரும் முயற்சியினாலும் & திரு.பொள்ளாச்சி அபியின் ஒத்துழைப்புடனும் வெளிவந்தது அனைவரும் அறிந்ததே - சரி இதை ஏன் இப்போ சொல்கிறேன் - கொஞ்சம் பொறுங்கள் ::

"ஒரு புத்தகத்தை படித்துப்பார்
கடந்தக்காலத்தை தெரிந்துக்கொள்வாய்"

ஆம், மீண்டும் படித்து பார்த்தேன் அந்த புத்தகத்தையும்தான் இப்போ புரிந்தது அவர்களின் கடந்த கால உழைப்பும், மற்ற படைப்பாளிகளின் பங்களிப்பும், இதை தனக்கே தெரியாமல் எனக்கு தன் சிறு படைப்பின் மூலம் புரிய வைத்த இரா.மோகனசுந்தரிக்கு நன்றிகள் பல, நிற்க அப்படி வெளியான புத்தகம் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதா என்றால் கேள்விக்குறியே? காரணம் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தபடி அடுத்த புத்தகம் "பெண்கள் கவிதை தொகுப்பு" அச்சு ஏற்ற நிலையில் இருக்கிறது இது விரைவில் வெளிவர வேண்டும் என்று பெரும்பாலான பெண் படைப்பாளிகள் ஆர்வத்துடன் இருப்பது தெரிகிறது, நல்ல விசயம்தான், ஆனால் அதே நேரத்தில் முந்தைய வெளியீடான "
யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்" விற்று தீர்ந்தால்தானே மேல் முதலீடு செய்ய வாய்ப்பாக இருக்கும் ஆதாலால் இது வரை கிடைக்க பெறாதவர்கள் திரு.அகன் அவர்களையோ அல்லது திரு.பொள்ளாச்சி அபி அவர்களையோ தொடர்பு கொண்டு பெற்றுகொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள், மேலும் இது வர்த்தக விளம்பரம் இல்லை.

ம்ம் இப்போ நான் தொடர்பு கொள்ள நினைத்த எழுத்து நண்பர் என்னோட அழைப்பு முயற்சியை அவர் அலைபேசியில் பார்த்து விட்டு அவரே அழைக்கிறார் :

பரஸ்பர நலம் விசாரிப்புக்கு பிறகு என்ன விஷயம் ரொம்ப நாளாக தொடர்பில் இல்லையே என்று வினவியபொழுது அவர் சொன்ன விஷயங்கள் நிறைய ஆச்சர்யங்களை தந்தது அதை பற்றி இன்று கொஞ்சம் விரிவாக எழுதலாம் என்று நினைத்த நேரத்தில், இத்தளத்தில் இன்று வேறு பிரச்சினை என் சிந்தனையை திருப்பி விட்டது உண்மையே : அதனால் இந்த தாமதம் :

சரி எனக்கும் வேலைக்கு செல்லும் நேரம் ஆகிவிட்டதால் உங்களை மீண்டும் இத்தளத்தில் தொடர்பு கொள்கிறேன் அன்பர்களே.....

நன்றி
மு.ராமச்சந்திரன் (மு.ரா.)

எழுதியவர் : மு.ரா. (19-Jan-13, 1:50 pm)
பார்வை : 155

மேலே