காலச் சுவடுகள்

நமக்கு முன்னால் நடந்தவையும்
நிகழ் காலத்தில் நடப்பவையும்
காலத்தின் சுவடுகளே !

படித்து அறியும் செய்திகளும்
பார்த்து தெரியும் நிகழ்வுகளும்
காலத்தின் சுவடுகளே !

முன்னோரின் வரலாறும் வாழ்வும்
இந்நாளில் கண்ட இன்ப துன்பங்களும்
காலத்தின் சுவடுகளே !

கேட்டிடும் வரலாற்று உண்மைகளும்
பார்த்திட்ட பசுமை நினைவுகளும்
காலத்தின் சுவடுகளே !

வாழ்ந்து மறைந்த தலைவர்களும்
நம்மோடு வாழ்ந்திடும் அறிஞர்களும்
காலத்தின் சுவடுகளே !

விஞஞானிகள் கண்ட வியப்புகளும்
விந்தைமிகு விஞ்ஞான வளர்ச்சியும்
காலத்தின் சுவடுகளே !

விடுதலைப் போரின் தியாகிகளும்
தற்கால அரசியல் நிகழ்வுகளும்
காலத்தின் சுவடுகளே !

கற்கால தமிழனின் வாழ்வும்
இக்கால தமிழர் நிலையும்
காலத்தின் சுவடுகளே !

தத்துவமாய் மிளிர்ந்த பாடல்களும்
தமிழே இல்லாத திரை இசைகளும்
காலத்தின் சுவடுகளே !

அந்நிய நாட்டை அறியா மனிதர்களும்
தாய் மொழியே பேசாத தவப்புதலவர்களும்
காலத்தின் சுவடுகளே !

ஏதோ பேருக்கு நாலு நண்பர்கள் நட்பும்
எழுத்து தளம் அருளிய நண்பர்களும்
காலத்தின் சுவடுகளே !

கூடி வாழ்ந்தக் குடும்பங்கள் கதையும்
கூட்டில் வாழும் தனி குடித்தனங்களும்
காலத்தின் சுவடுகளே !

பெரியோர்கள் முடித்திட்ட திருமணங்களும்
கணினிகள் நடத்த்டும் மணவிழாக்களும்
காலத்தின் சுவடுகளே !

நாம் பதித்திடும் காலடிச் சுவடுகள்
அடுத்தவரிடம் நினைவுச் சின்னமானால் அதுவும்
காலடிச் சுவடுகளே !

காலத்தின் சுவடுகள் காப்பியம் போல
காலத்தின் அருமைக் கருதி முடிப்பதும்
காலத்தின் சுவடுகள் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Jan-13, 9:45 pm)
பார்வை : 184

மேலே