சாதி என்ன சாதியோ!

சாதி என்ன சாதியோ-அட
சண்டை தானே மீதியோ.
ஆதியிலே சாதி யா!
அது எதுக்குத் தேவையா?

சலுகைக் காக சாதியா-அட
சண்டைக் காக சாதியா!
சொல்லுங்கய்யா சொல்லுங்க
சுதந்திரமே இதுக்காய்யா?

பிறக்கும் போதே பிறக்குது-அட
இறக்கும் வரை தொடருது
இறந்த பின்னும் கல்லறையில்
இந்தச் சாதியேன் வாழுது?

பிறக்கும் போதே எழுதுவார்-அட
பிள்ளைக் கென்ன சாதிடா
பிறந்தது மனி தனுக்கா
பின்னேவந்த சாதிக்கா?

தொழிலைச் சொல்ல வந்தது-அட
தொல்லை யாகிப் போனதே
ஒருத்தி பெற்ற பிள்ளைகளில்
உயர் வென்ன தாழ்வென்ன?

எழுதியவர் : கவிஞர் கொ.பெ.பிச்சையா (19-Jan-13, 10:03 pm)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 128

மேலே