உணராத மடையனல்ல நான்...!

அஞ்சறை பெட்டியில்
அடுக்கி வைக்கிறாய்....
உனக்கான
ஆசைகளை மட்டும்....!
குழம்பில் கிடக்கும்
கடுகு சீரகம் கூட
உனதாசைகளை சொல்லும்...!

உணராத மடையனல்ல நான்...!
உணர்ந்தே நடிக்கும்
உன்னவன் நான்...!
உண்மையில்
உன்னை தவிக்க விட்டு
மஞ்சனையில் கொஞ்சலாய்
கெஞ்சும்
யாசகன் நான்...!

என்றென்றும்
உனக்கே உனக்கான
சேவகம் செய்யும்
சேவகனாய் நான்....!
என்றும்
என் தேவதையாய் நீ....!

அடுப்படி வேலை முடித்து
களைப்பாய் நீ வருவாய்....
ஆறுதலாய் உன்
கால்கள் தொட்டு அமுக்கி
ஆசையாய் முத்தமிடுவேன்...!

வேண்டாமென தடுப்பாய்....!
உண்மையில் பொய்யாய் நடிப்பாய்...!
உன் விரல்களோடு
என் விரல்கள் கோர்த்து
உனக்குள்ளே
என்தாசைகளை விதைப்பேன்...!
அதன் விருட்சங்கள் காண
மெதுவாய்
உன்னை தொடுவேன்...!

மோகம் கொண்ட மேகமாய்
நீ
என் மேனியில் படர்வாய்....!
என் இருகைக்குள் அடங்கி
முத்தமழை எங்கும் பொழிவாய்...!

தாகம் கொண்ட நான்....உன்
தேகம் தீண்ட....
வேட்கை கொண்டு இருவரும்
வியர்வையில் குளிப்போம்....!
காமத்தீயில் வெந்து களிப்போம்...!

வேட்கை அடங்கிய பின்னும்
மெதுவாய்...
உன்னை தொட்டு அணைப்பேன்...!
நீ
வெட்கம் கொண்டு நாணத்தால்
இருக்கைகள் சேர்த்து
கண்களை மறைப்பாய்....
இன்னும் புதுமண பெண்ணாய்...!

எழுதியவர் : அருண்குமார்.அ (22-Jan-13, 9:21 am)
பார்வை : 841

மேலே