அன்பு நண்பனே கிடைப்பாயா??

எனக்கே எனக்கான
என் அன்பு நண்பனே
தலை வைத்து படுக்க உந்தன் ஒரு மடி
என் கவலை மறக்க
சாய்ந்து கொள்ள உந்தன் ஒரு தோள்
எந்தன்
தலை கோதிவிட உந்தன் விரல்கள்
என் வார்தையை
பொறுமையுடன் கேட்கும் உந்தன் செவிகள்
எங்கு சென்றாலும் பாதுகாப்பாய்
கைகளை பொதித்துக்கொள்ளும் உந்தன் கைகள்
என் வலிகளை ஓடிசென்று சொல்லி
முகம் புதைக்க உந்தன் ஒரு நெஞ்சு
என் கண்ணில் உதுக்கும்
கண்ணீரரை துடைக்கும் உந்தன் ஒரு விரல்
என் வெற்றியிலும் தொல்வியிலும்
அனணத்து முதுகு தட்டும் உந்தன் தோழமை
என் வாழ்வின் அணைத்து நிகழ்விலும்
ஆதரவான உந்தன் வாய் மொழிகள்
எந்தன் திறமைகளை என்றும்
கேலி கிண்டல் செய்யா உந்தன் மனம்
என் ரகசியங்களை
பலரிடம் பரப்பாத உந்தன் இதழ்கள்
என் இன்பத்திலும்துன்பத்திலும்
மேலும் புலம்பாதவாறு ஒரு முத்தம்
இவற்றை தேடி அலையும்
என்னுள்
யாரிடம் சொல்லி அழாத என் சோகம்
தன்னுள்

எழுதியவர் : மைதிலிசோபா (25-Jan-13, 7:21 pm)
பார்வை : 411

மேலே