இரண்டாம் மரணம்
(என் "முதல் மரணம்" என்னும் கவிதையின் தொடர்ச்சியாக இந்தக் கவிதை அமைக்கப்பட்டிருக்கிறது)
உயிரிழந்த சடலமாய்
ஊருக்குள் நான் நுழைய
என்ன சொல்ல
என்னோட பிழைய
என் நெஞ்ச போட்டு குழைய
காலம் கடந்து வந்தேனா
ஞாலம் வெறுத்து நொந்தேனா
இனி வாழ்க்கையே வீண்தானா
இனி நான் வாழ்வதும் சரிதானா?
இனியும் வெறுக்க ஒன்றுமில்லை
முற்றும் துறக்கவும் துணிவில்லை
இனி நான் என்று எதுவுமில்லை
அவளாவது நலமாயிருக்கட்டும்
அவள் வாழ்வு வளமாகட்டும்
என் காதல் கனவாகட்டும்
நான் ஊருக்குள் என் வீடு
சேர்வதற்குள் நரகம் சென்று
திரும்பினேன்...!
இதோ அவளின் அம்மா
நெஞ்சில் அடித்துக்கொண்டு வருகிறாள்!
“ஐயையோ ஐயையோ
என் பெண்ணும் மருமகனும் சென்ற
பேரூந்து விபத்தானதே -- என்
மகள் விதவையானதே"
என்றே அலற -- அது என்
செவியில் விழ
என் இரண்டாம் மரணம்
நிகழத் தொடங்குகிறது....! (தொடரும்)