காதலின் ஆண்டவம்...

எதிலும் தோற்கும்
எண்ணம் கொண்டாரில்லை
அதிலும் காதலை கைவிட
நினைக்கும் முன்னே மரித்தாரே உளர்
நாமும் அவ்வாறோ
நம் இருமனம் ஒத்தப் பின்பும்
இன்னும் பிறமனம் ஒப்பவில்லை
நம்மை பெற்று வளர்த்தோர்
கூடி மகிழ்ந்தோர் கூட்டம் எத்தனை
அவர் மகிழ்வு முகத்தில்
ஆனந்தம் கூத்தாடும் அத்தனை
நம் இருவர் இணைந்து அவர்
வாட வைப்பதா காதல்
அக்காதல் நம்மை ஏற்குமா
வாழ்த்தி வாழ வைக்குமா
முடியும் வரை பெற்றோர்
மனம் வாழ்த்த பாடுவோம் - இல்லை
அந்நேரமே அவர்க்காக நாம் மாறுவோம்
பத்தும் நேசப் பாசங்களை
வாட்டும் காதல் பிரிவோம்
குடும்ப சந்தோஷத்தில் இணைவோம்
பார்! இதில் சோகம் இருக்கும்
ஆனால் நாம் சொர்க்கம் சேர்த்தோம்
ஆம் நம் குடும்பம் நாம் வாழும் சொர்க்கம்
நம் முடிவின் ஆரம்பம் - அந்த
காதலின் ஆண்டவம்...!

எழுதியவர் : manju (26-Jan-13, 7:49 pm)
சேர்த்தது : மஞ்சு முருகன்.mmg
பார்வை : 131

மேலே