அவ(னும்)ளும் ......

ஆணில் உருகிய
பெண்ணாய் பெண்ணில்
இளகிய ஆணாய் பிரம்மன்
படைத்திட்ட
மனிதப்பிறவியிலே மூன்றாமினம்
நான் திருநங்கையாம்...!
அர்த்தமில்லாத
அதிசயப்பிறவியாய்
கண்டதால், அர்த்தநாரியும்
கூட....! எத்தனைப்
பெயரிருந்தும் என்ன பயன்
எனக்கு....? நித்திரையில்
நிம்மதி தூக்கம் ஏது?
தூக்கம் தொலைத்த
துக்கம் கேட்க சொந்தம்
ஏது? சாதிவெறி பிடித்த
மனிதர்களிடத்தில்
ஓரவஞ்சம்
கொண்டு ஒற்றையாய்
ஒதுக்கிவிடப்பட்டேன்....!
பிச்சைக்காரியாய், ஏன்
காரும் எச்சிலாய்தான்
பார்க்கப்பட்டேன்.... இருக்க
ஒரு இடம்,
உழைக்க ஒரு வேலை,
பிழைக்க
ஒரு வழி இல்லை உண்மையிலே
உரிமைகள்
எதுவுமே எனக்கில்லை....
தாய்த்
தந்தையே தன்பிள்ளையென
சொல்லத் தயங்கும்,
நானும்
ஒரு மனிதப்பிறவிதான்....
என்னுள்ளும்
பாய்கிறது செங்குருதிதான்...!!!

எழுதியவர் : விஜயராகவன் (28-Jan-13, 10:06 am)
சேர்த்தது : ragavanlazy
பார்வை : 91

மேலே