உன் நினைவுகள்...
உன் நினைவுகள்...
காலையில்
கோலமில்லா வாசல்
பார்த்தேன், உன்
நினைவுகள்...
நீ நடந்த பாதையில் பாத
சுவடுகள் பார்த்தேன்,
உன் நினைவுகள்...
நீ நனையாத சாரல்
மழையைப் பார்த்தேன், உன்
நினைவுகள்...
நீ அணிந்த
சேலை காற்றிலாட
பார்த்தேன, உன்
நினைவுகள்...
நீ அமர்ந்த இருக்கையில்
இடைவெளி பார்த்தேன்,
உன் நினைவுகள்...
நீ கொஞ்சிய குழந்தையில்
சினுங்கல் பார்த்தேன்,உன்
நினைவுகள்...
முகம் காணும்
கண்ணாடியில் ஒட்டிய
பொட்டினை பார்த்தேன்,
உன் நினைவுகள்...
உடைந்த வளையல்களில்
செய்த ஓவியம் பார்த்தேன்,
உன் நினைவுகள்...
நீ எழுதிமுடித்தும்
மூடாத பேனாவைப்
பார்த்தேன், உன்
நினைவுகள்...
என்
பெயரோடு சேர்த்தெழுதிய
உன் பெயரை பார்த்தேன்,
உன் நினைவுகள்...
உனக்கு பிடித்த
எண்ணை நாள்காட்டியில்
பார்தேன், உன்
நினைவுகள்...
உனக்கென நான்
வாசிக்கும் கவிதைகளும்,
உன் நினைவுகள்...
எப்பொழுதும் தொடரும்
உன் நினைவுகள்,
எனக்காக துடிக்கும் என்
இதயம்
இருக்கும் வரை...!