உலக நியதி
மாற்றனின் மனைவி என்று தெரிந்தும் ....
மாராப்பு விலகும் போது-ஓரகண்ணால்
ரசிக்கிறாய்.......!
இல்லாதவன் பிச்சை கேட்டு.....
கையேந்தும் போது சீ! போ என்று -முகம்
சுளிக்கிறாய்....!
ஏழைய ஏமாற்றி அவன் ....
வயிற்றில் அடித்து உன் -வயிறு
வளர்கிறாய்....!
இவை அனைத்தும் நியாயம் என்று....
நீ நினைப்பது அநியாயம்...!
அனைத்து தவறும் நீ செய்து விட்டு ...
உன் தவறை நியாயப்படுத்த -இது தான்
உலகத்தின் நியதி என்று ஒரு புதிய ....
உலக நியதி வகுப்பாய்...
என்னே! உன் நியதி .....................!