*****************கவிதை.. க"விதை"****************** ஆவாரம் பூ
கவிதை....
க "விதை"
கருத்துக்களை விதை
கற்பனைகளால் விதை
கண்களால் பார்த்ததை விதை
கலங்க வைத்த காட்சிகளை விதை
கலைசொற்களால் கண்ணியமாய்
கன்னி தமிழில் விதை...
அது கவிதை....
கவிதை என்றறொரு பெயரில்
கண்டதையும் விதைக்காதே
கடுஞ்சொற்களை உதிர்க்காதே
காரி உமிழ வைக்காதே...
பிற உள்ளங்களை காய பட வைக்காதே....
****ஆவாரம் பூ***