************என்னை மறக்க வேண்டும்*********** ஆவாரம் பூ

நயவஞ்சக நாட்டிலே
நாய்களுக்கும்,பேய்களுக்கும்
நடுவிலே
நடித்து வாழும்
வாழ்க்கையை விடுத்து

என்னை கொஞ்சம்
மறக்க வேண்டும்....

என்னை இங்கு
கொஞ்ச நேரம்
மறக்க வேண்டும்....

எழுத்துலகில்
எண்ணியதை
எழுத வேண்டும்.....

ஏராளமான கவி
படிக்க,
படைக்க வேண்டும்....

கவலைகளை
கடமைகளை
கண்சிமிட்டும் நேரமாவதும்
மறந்து நானிங்கு வாழ வேண்டும்....


***ஆவாரம் பூ***

எழுதியவர் : ஆவாரம் பூ (31-Jan-13, 10:15 pm)
சேர்த்தது : ஆவாரம் பூ
பார்வை : 172

மேலே