...........நர்த்தனம்..........

நீ செய்யும் நன்மைகளுக்கும்,
சமன்படுத்தும் நியாயங்களுக்கும்,
சாபங்களும் சாடல்களுமே மாலையாய்,
வந்துவிழும் உன் தோள்களில்,
கவலைகொள்ளாமல் நீ,
உன் போக்கிலேயே பயணித்தால்,
நித்தநித்தமும் நீ ஆடவேண்டியிருக்கும்,
ஒரு "காலிங்க நர்த்தனம்"
முடிவில்,
துதிக்கப்படும் உன் துடிப்பான வாழ்க்கை !
நீ மரித்தே போனாலும் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (2-Feb-13, 9:34 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 141

மேலே