வானவில்,பூங்கொத்து மற்றும் நம் இந்தியா
வானவில்லில் ஏழுவர்ணம்
காண காண இன்பமே என்கிறாய்
வெவ்வேறு நிறங்களின்
ஒற்றுமை அது
வேற்றுமையில் ஒற்றுமை
வண்ண வண்ண மலர்களை
ஒன்று பட பார்க்கையிலே
கண்ண ரெண்டும் பரிக்குதே என்கிறாய்
வெவ்வேறு இன பூக்களின்
ஒற்றுமை அது
வேற்றுமையில் ஒற்றுமை
ஆனால்
உனக்கு அந்த வாய்ப்பை
கடவுள் வரமாக தந்தாள் மட்டும்
ஜாதி,மத பேதம் பேசி
வேறுபட்டு நிக்குற
கலகத்த உண்டுசெய்து
கலவரத்த பண்ணுற
வானவில்லில்
நிறத்த நிறம் வெறுக்குதா
இல்ல தள்ளி போய்தான் நிக்குதா?
பூக்களில்
நீ மல்லி, நான் ரோஜா
உன்னவிட நான்தான் அழகுனு சொல்லுதா?
இல்ல முள்ளு கொண்டுதான் குத்துதா?
வேற எந்த தேசத்துக்கும்
இல்லாத பெருமை
நம் இந்திய தேசத்திற்கு இருக்கு
வானவில்லாகவும் நம் இந்தியதேசம் தான்
பூன்கொத்தாகவும் நம் இந்தியதேசம் தான்
இங்க இருக்குற எல்லா
நிறங்களும் அழகானவைதான்
இங்க இருக்குற எல்லா
பூக்களும் போற்றதக்கதுதான்
வேற்றுமையில் ஒற்றுமை கொள்வோம்
உலகினில் சிறந்தது
நம் இந்திய தேசம் என்போம்
வாழ்க நம் மக்கள்
வளர்க நம் இந்தியா