என் ஏழை காதலி !

மறு ஊட்டம் செய்ய மறக்காமல்
தருகிறாய் தவறிய அழைப்பு

நான் செய்த அழைப்பைத்தான் தவற விடுகிறாய் நீ
குறும் செய்தியில் கொஞ்சு என்னையென்று மீண்டும் குறுப்பிடுகிறாய் !

மனம் நொந்த படி நான் மறு ஊட்டம் எதற்கடி
மன்னித்து கொள் குறும் செய்தியில் என்றால் ?

எனக்கு புதிய கைபேசி பரிசு கொடுத்ததால் நீ
உன் பழைய கைபேசிக்கு இதை செய் என்கிறாள்

பழைய கைபேசியிலும் புதிய எண்ணிலும்
என் தாய் என்னிடம் பேச வேண்டுமாம்


மறு ஊட்டம் = recharge

எழுதியவர் : . ' . கவி (11-Nov-10, 3:31 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 788

மேலே