............ஏனடி தோழி..........
கருத்து வேறுபாடு,
கலைத்துப்போட்டது எங்கள் உறவை,
அவள் தொலைநோக்கை,
தவறாமல் ரசிக்கிற நான்,
ஒருமுறை தவறென்றேன் !
என்ன நினைத்தாலோ ஏறெடுத்தே பார்க்கவில்லை !
என்னையும் என் பதிவுகளையும் !
காதலைவிட நட்புக்கு வலிமை அதிகம் என,
குறுகியகாலத்தில் உணர்த்திய ஜீவன் அவள் !
உணர்சிகளையும் உணர்வுகளையும் தலையிலேற்றி,
தவறாமல் கொண்டாடி மகிழ்கின்ற பிறவி !
ஏனோ பிரிந்து போனாள் மொத்தமாய் சுத்தமாய் !
என் முயற்சிகள் தோற்றுப்போனது அவளிடம் !
நேரில்சென்று சமாதானம் பேச இயலாது என்னால் !
காரணம் அவள் முகநூல் தோழி முகம் காட்டாதவள் !
நம்பிக்கையும் நேர்மையுமாய் வளர்கிற உறவு,
அற்பவிசயங்களுக்கு பட்டென உடைவதை,
எப்படி ஏற்று அனுசரிக்கும் உண்மையே பேசிய இதயம் ?
என்றாலும் எப்போதும் நேசிக்கிறேன் என் பதிவுகளை,
தவறாமல் வாசித்து என்னுள்ளே பதிந்து போனவளை.............