.............முக்கியம்...........

எவ்வளவு முக்கியமானவள் எனக்கு நீ என்பதை,
என் உயிரில்தான் எழுதிவைத்திருக்கிறேன் !
அதை மனக்கண்களால் படித்து உணர,
நீ என் உயிரோடு உயிராகவேண்டும் !
மேலும் ஒரு விசயம் !
உனக்கான முக்கியத்துவம் உயிரைவிடும் !
நேரம் வருங்கால் அஃது !
நான் உயிரைவிடும் அதே நொடி !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (7-Feb-13, 11:21 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 92

மேலே