............மீண்டும் வந்தவள்...........
நீ மீண்டும் வந்ததால் நான் மீண்டு வந்தேன் !
என் கவலை குழப்பங்களுக்குள்லிருந்து !
நட்புக்கு நாடகம் தெரியாது நர்த்தனமும் அறியாது !
அதன் மேனியெங்கும் பட்டவர்த்தனமும்,
பட்டென உடைத்துப்பேசும் தன்மையும் !
நீ வந்துவிட்டதால் சென்றுவிட்டது,
என் கண்ணோரம் கூடுகட்டிய திவலைகள் !
முன்பினும் வெளிச்சமாயிருக்கிறது,
என் பார்வையும் அதன் கூர்மையும் !
இனி உன்னிடம் சிதறுதேங்காயாய் அடித்து உடைக்கப்படும்,
என் அவலங்களும் அடங்காத கோபங்களும் !
தட்டிக் கொடுத்து நெட்டிமுறிக்கவைக்கும்,
உன் தன்மைமிகு தரமான வார்த்தைகள் !
நன்றிசொல்லி விலகிநிற்க முடியாது !
நட்பை தொழுதுவிடுகிறேன் அதற்கு பதிலாய் !
நீ வந்துவிட்டதால் வென்றுநிற்குதடி நம் நட்பு !
என்றென்றும் தங்குதடையின்றி எனை தாயாய் பேணும் தோழியே !!