தமிழே வெல்லும்,தமிழனே வெல்வான்

இரவின் முடிவில்
பகல் தோன்றும்

இன்னல்களின் முடிவில்
சுகம் தோன்றும்

தோல்விகள் முடிவில்
தோற்று போகும்

வெற்றிகள் தோளில்
ஆட்டம் போடும்

தமிழனை அழிக்க
முயல்பவனும்

காற்றை தடுக்க
முயன்றவனாய்

மூச்சிரைத்தே
அன்று மாண்டுபோவன்

தமிழுக்கும் தமிழனுக்கும்
முற்றும் என்பது இல்லையாட

முடுவு கட்ட
நினைப்பவன் மடையனடா

தோழனுக்கு உயிரையும்
கொடுக்கும் தமிழனடா

துரோகிக்கு சமாதியும்
கட்டும் தமிழனடா

உன்னை புதைத்தால்
புழுத்து போவாய்

தமிழனை புதைத்தால்
முளைத்து எழுவான்

தமிழே வெல்லும்
தமிழனே வெல்வான்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (9-Feb-13, 8:15 pm)
சேர்த்தது : a.n.naveen soft
பார்வை : 118

மேலே