சிந்தையின் சிதறல்

கொஞ்சிடும் எழிலோ நெஞ்சுக்கு மருந்து
விஞ்சிடும் அழகோ விழிகளுக்கு விருந்து !
பசுமைப் போர்வை பார்வைக்கு அருமை
கண்டிடும் காட்சியோ கண்களுக்கு குளுமை !

இதயமும் இளகிடும் இயற்கையை ரசித்தால்
இன்பம் பெருகிடும் இரும்பும் உருகிடும் !
குழம்பிடும் மனங்கள் தெளிவுப் பெற்றிடும்
அரும்பிய மலர்களாய் வாசம் அடைந்திடும் !

சிகரம் தொட்டால் சிந்தனைகள் பிறக்கும்
சிதறிய உள்ளமோ சீர்படத் துவங்கும் !
சிற்பியின் கற்பனையில் வடித்த சிலையாய்
சிந்தையில் தோன்றிய சிறிய கவிதை !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Feb-13, 9:22 pm)
பார்வை : 134

மேலே