ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

µ
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
பிறந்தக் குழந்தைகள்
நட்சத்திரங்கள்

µ
வெள்ளை ஆடையில்
எல்லோரும் கலங்கம்
நிலவைத் தவிர

µ
நிறம் ஒன்றே
வகைகள் வேறுவேறு
குருதி

µ
சிரிக்கும் ரோஜாவும்
கண்ணீர் வடிக்கும்
பனித்துளி

µ
குளத்தில் கல் எறிந்தேன்
அலைகளைத் தடை செய்தது
தாமரைகள்

----
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.

21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.

வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.

புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.

தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.

என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா

நன்றி.

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (12-Feb-13, 7:29 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 96

மேலே