இலக்கணம் பகுதி 2 – தமிழில் தெளிவு

மடுவில் பால் எடு, கற
தொண்டையில் சங்கடம் கரகர

எரிந்த பலகை கரி
சமைத்த உணவு கறி

உயிர் ஒருதுளி கரு
படைப்பின் மையம் அதுவும் கரு
குழந்தை கலைப்பு கருக்கலைப்பு
வன்மம் கொண்டு அழித்தல் கருவறுத்தல்

நீர்நிலை விளிம்பு கரை

படகோட்டிக்கு நிலம்-காட்டி கலங்கரை விளக்கு

(கலம்=படகு+ கரை=நீர்நிலை விளிம்பு =கலம்கரை=கலங்கரை)

களங்கம் என்பது கறை
துணி சலவை செய்வது கறை போக்க

தமிழ் வள்ளல் பெயர் காரி

எச்சில் சேர்த்து எனில் காறி

ஊர்தியின் ஆங்கிலம் கார்
"ஊர்தியை" ஆங்கிலத்தில் காரை

சுண்ணாம்பு கல் அது காறை

மலை என்பது கிரி

தலைசுற்றல் என்பது கிறுகிறுப்பு

காட்டு விலங்கு ஒன்று கீரி

நுண்கோடு போட்டு எனில் கீறி
நுண்கோடு போடு எனில் கீறு
தென்னை, பனை ஓலை கீற்று

நாம் சமைக்கும் ஒரு தாவரம் கீரை

நாய்குரல் எழுப்பு எனில் குரை
முழுமை எதிர்ப்பதம் குறை
அதிகம் எதிர்ப்பதம் குறைவு

மக்களில் ஒரு இனத்தவர் குறவர்
முருகன் துணை வள்ளி குறத்தி

நோக்கம் என்பது குறி
அடையாளம் இடு எனில் குறி இடு
சுட்டுவது எனில் குறிப்பாக
சின்னது எனில் குறில்
சின்ன மன்னன் குறுநில மன்னன்

புள்ளி முனை என்பது கூர்முனை
நுண்மையாய் நோக்குவது கூர்வது
நினைவில் வைப்பது நினைவு கூர்வது


பகுபட்ட பொருளின் ஒருங்கு குழுமம் கூறு
காய்களை ஒருங்கி விற்பது கூறுபோட்டு விற்பது

தெரிவி எனில் அதுவும் கூறு

தெரிவித்து எனிலது கூறி
தெரிவிப்பது எனிலது கூறுவது.
தெரிவிக்காத எனிலது கூறா

வாய்மொழி வார்த்தை கூற்று
ஆங்கிலத்தில் அது ஸ்டேட்மெண்ட்

வீட்டின் ஓலை தலைச்சுவர் கூரை

திருமண ஆடைகூறை
தறியில் நெய்த திருமண புடவை கூறைப்புடவை

வேண்டி எனிலது கோரி
வேண்டுவது எனிலது கோரு
வேண்டுவது எனிலது கோருவது
வேண்டுதல் என்பது கோரிக்கை

நாணலில் ஒரு வகை கோரை (புல்)
பல்லின் ஒருவகை கோரை
உணவை வெட்டி கிழிக்க உதவும் கூரான பல் கோரைப்பல்


இன்னும் வரலாம்.......

எழுதியவர் : மங்காத்தா (12-Feb-13, 5:06 pm)
பார்வை : 197

மேலே