என்ன கவிஞனா மாத்திபுட்டியே

அழகின் ஆடம்பரமாய்
அதிசயத்திற்க்கு பாரமாய்
அதிகமாய் அழகானவளே
குறையாய் குறையானவளே

தென்னைக்கு தென்னஞ்சோறு
என் நெஞ்சுக்கு நெஞ்சோறாய் நின்னவளே
வெட்கத்த வெளிபடையா வித்தவளே
வெறுமன பய என்கிட்ட

சிறிப்பொன்னு சிரிச்சாயே சின்னா
பின்னமா சில்லரையா சிதறினனே

அழகான நெஞ்சுக்குள் அமைதியான கூட்டுக்குள் ஓடி வந்த என்ன ஓரமா இடங்கொடுத்து ஒட்ட வச்சியே உன் அன்புல அரவனைச்சியே

சொல்லாம சொல்லல சொன்னதையம் சொல்லல
சொல்லுல அடங்கிய என் காதல

சொக்கு புடி போடவே சொக்கி
தவிச்சேன் சொல்லாம விக்கி
தவிச்சேன்
முட்டி மோதி முன்ன வந்து
முந்திரிக்கோட்டையா முனுமுனுத்தேன் என் காதல

சட்டுனு சிரிச்சுபுட்டு சிரிப்பால சில்லரைய கொட்டிபுட்டு காதலான்னு
கேளிக்கையா கேட்டுபுட்டாயே?

என் இதயக்கண்ணாடி உடைந்ததென்ன ஒன்றான உன் பிம்பம் நூறானதென்ன

காதலிக்க சொல்லிப்புட்டு காதலிக்காம போனாயே
கல்லுலி மங்கனான என்ன கவிஞனா மாத்திபுட்டு மறைஞ்சிபுட்டியே.... ..

எழுதியவர் : மணிகண்டன் (எ) சுகன் (13-Feb-13, 1:20 am)
பார்வை : 86

மேலே