ஆதிக்க சிந்தனைகளுக்கு ஒரு வேண்டுகோள்

அரசு நிலத்தில்
ஆக்கிரமிப்பு செய்து
கூடாரம் கட்டி
வகுப்புகள் நடத்தி
பாடம் கற்பித்து
சான்று வழங்கும்
அன்பு சேவை உள்ளங்களே,

கூடாரம் இட்டிருப்பது
அரசு நிலம்
என்பதை மறந்து
வழிப்போக்கர்களை
அரட்டும்
அபத்தமான
ஆதிக்க எண்ணத்தை
சற்றே
திசை திருப்பி பார்க்கும்
பக்குவம் பெற
முயற்சி செய்யுங்களேன்.

சமநீதி, சமநோக்கு,
சமத்துவம் பேசும்
கோடாங்கி சிந்தனைகளே
தோழமை என்பதிலும்
ஆதிக்க உணர்வுகள் மட்டுமே
மிளிர வேண்டும்
எனும் அனிச்சை எண்ணத்தை
சற்றே விலக்கி வைத்து
இந்த உலகில்
பார்வை
செலுத்த முயலுங்கள்.

புள்ளிகள் என்ன
நீங்கள் மட்டும் கோலம்
போடுவதற்கா?

கோலம் போட
முயலும் நீங்கள்
பிறரை
அலங்கோலம் செய்ய
முயலுதும் ஏன்?

புள்ளி என்பது தளத்தின்
ஒரு முறை.
அதற்கு முக்கியத்துவம்
கொடுக்கும் நீங்கள்

அதையே
உங்கள் அங்கீகாரம் பெறாத
ஒரு நபர் பெற்றால்
கொந்தளிப்பது ஏன்?

அந்த நபர்
செய்த குற்றம் என்ன?

ஏனிந்த அநாகரீகத் தாக்குதல்
தொடர்கிறது?

புள்ளி என்ன
உங்கள் அங்கீகாரம் பெற்று
வாங்க வேண்டிய
நியாய விலை கடைச்சரக்கா?


விமர்சனங்கள் என்ன
உங்கள் ஏகபோக
பரம்பரைச் சொத்தா?

ஏச்சுகளையும் வசைகளையும்
தனிநபர் திசை திருப்புகிறீர்களே!

படைப்பாளி புள்ளி பெறுவது
அவரின் படைப்பின் பாணிக்கு
மட்டும அல்ல!

அந்த படைப்பு தரும்
விளைவு சார்ந்த
உணர்வுகளுக்கும் தான்!

இதுவேதான் நடந்தது
அன்பர் அனுசரணின்
படைப்புகளுக்கும்!

திருத்தம் எனும்பெயரில்
ஆசிரியர் தொழில் செய்ய
இது என்ன பாடசாலையா?

உங்கள் விமர்சனங்கள்
படைப்பாளிகளுக்கு அளிக்கும்
வேதனை
உணர்வீர்களா நீங்கள்?

இங்கு படைப்பு
பதிவேற்றும் அனைவருமே
வழிப்போக்கர்களே!


அரசு நிலத்தில்
கூடாரம் அடித்து
பட்டாதாரர் போல
நாட்டாமை செய்யும்
போக்கை விட்டு

தளத்தின் வசதிகளை
இன்பமயமாக அனுபவிக்கும்
ஏற்பாடுகளில்
சுகம் காண முயல்வதே
ஆரோக்கியம்!

இது எனது வேண்டுகோளே!

புரிதல் வரின் அதிக நலம்!

இல்லையேல் கருத்து மோதல்கள்
தனிநபர் சாடல்களாய்
உருவெடுக்கும்
அபாயம் வரும்!

எனது கருத்தை
சாடுவதில் வீர்யம் காட்டும்
ஒவ்வொரு சிந்தனையும்
ஆதிக்க சிந்தனையே!

எழுதியவர் : மங்காத்தா (15-Feb-13, 8:01 pm)
சேர்த்தது : மங்காத்தா
பார்வை : 159

மேலே