புள்ளிகள் தொடர்பான புள்ளி விவரங்கள்
படைப்பில் இந்த மாதம் முன்னிலை வகிப்பவர்கள்
ஹரிஹர நாராயணன்.வி
படைப்பு 533, பார்வை 26911, தேர்வு 137
கவிஞர் இனியவன்
பார்வை 44356 கவிதை 508 தேர்வு 850
கார்த்திகேயன்919
தேர்வு 483 பார்வை 3081 படைப்பு 5
கே.எஸ் கலை கருத்து 416
கார்த்திகேயன்919 எப்படி முன்னணியில் நிற்கலாம் நேற்று வந்தவர்?
அதுவும் படைப்புகள் பற்றிய அறிமுகமே யாருக்குமே இல்லாதவர்?
இங்கு தொடர்ந்து இரண்டு வருடங்களாக தோட்டத்தை சீர்படுத்தி கொண்டு தளத்தில் சீரான தொடர்பு வைத்துக்கொண்டு ஒரு குழுமமாக ஒரு வட்டம் செயல்பட்டுக் கொண்டு, போட்டிகள் நடத்தி கொண்டு, சான்றுகள் வழங்கிக் கொண்டு இருக்கும்போது?
இவரின் சாதி, என்ன கோத்திரம் என்ன, படிப்பு என்ன, ஊர் என்ன, கணக்கின் தணிக்கை என்ன, கள்ளக்கணக்கு வைத்திருப்பவரா,ஆணா, பெண்ணா, வயது என்ன, தகுதி என்ன, இலக்கியத்தில் என்ன பட்டம் இவருக்கு,?
இதெல்லாம் அறிவிக்காமல் இவரின் படைப்பு எப்படி அங்கீகரிக்கப் படலாம்? அங்கீகரிகப்படுவது ஒரு சமாசாரம் இல்லை என்றாலும் அது எப்படி முதன்மை இடத்தை பெறலாம்?
(கார்த்திகேயன்919 இந்த தளத்தின் ஒரு கர்ணன் )
தமிழின் தகுதி என்னாவது? தமிழின் தன்மை என்ன ஆவது?
தரம் என்பதற்கு இலக்கணம்தான் என்ன?
இலக்கணம் என்பதற்கு பொருள்தான் என்ன?
இந்த கேள்விக்ளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல் இந்த மங்காத்தா வீணாய் கலாய்ப்பதில் மட்டுமே தனது தரங்கெட்ட குதர்க்கத்தை மட்டும் காட்டினால் அவரை கல்லெறிய வேண்டாமா?
இதற்கெல்லாம் விடைதான் என்ன?
தளத்தின் புது வரவுகளை ஆராய்ந்ததில்
கீழ்வரும் நிலவரங்கள்:
டிசம்பர் 12 ல் புது வரவுகள்
“அசோக் பாண்டியன்” தொடங்கி “இளங்கோ அருணா” வரை 499 நபர்கள்
ஜனவரி 13 ல் புது வரவுகள்
“யோகி தமிழ்” தொடங்கி “வினோகி வரை” 598 நபர்கள்
பிப்ரவரி 15 வரையிலான புதுவரவுகள்
“பாலயோகி” தொடங்கி “ஜய் மோ” வரை மொத்தம் 350 நபர்கள்
பிப்ரவை 16 ல் அன்பர் அஜித் என்பவர் மட்டும் 13 கணக்குகள் தொடங்கியுள்ளார். அஜித் குமார்111 எனத் தொடங்கி, ஒவ்வொரு கணக்கிற்கும் ஒரு எண் 1 ஐ சேர்த்துக்கொண்டே போயிருக்கிறார்.
இவர் பிப்ரவரி 8ல் அஜித்குமார்11 எனவும் ஒரு கணக்கு தொடங்கியுள்ளார்.
மாதவாரியாக சில கண்ணோட்டங்கள் விடுவோம்.
டிசம்பர் 2012
படைப்பாளி சேர்ந்த நாள் பார்வை படைப்பு தேர்வு
kavignar iniyavan 28-Dec 70425 760 1184
gowrisrinivasan 04-Dec 1110 5 278
namaki 18-Dec 3094 51 244
abi ruban 14-Dec 5135 27 173
kartheesan 02-Dec 4593 50 158
sangeetha k 12-Dec 5359 39 76
Arishtanemi 08-Dec 1880 36 68
selvi41 09-Dec 941 15 61
Ponmozhi 02 Dec 1262 11 51
k ravichandran 22-Dec 1700 39 48
jayananthan 28-Dec 1847 19 40
maathavan 09-Dec 2180 21 30
yarlpavanan 30-Dec 1781 21 28
abi malasiya 21-Dec 1032 17 22
dharamrajR 23-Dec 2618 20 22
harimca 20-Dec 1579 12 19
balamilki 01-Dec 1357 14 18
vinayputhu 23-Dec 1269 17 18
saravanan siva 12-Dec 2510 23 15
gurukalai24 21-Dec 1479 16 9
பிப்ரவரி 2013
cheerschandru 09-Feb 4081 78 47
சனவரி 2013
படைப்பாளி சேர்ந்த
நாள் பார்வை படைப்பு தேர்வு
saravanaa 04-Jan 4122 56 605
sannu 10-Jan 2262 17 418
kavithaikaran 19-Jan 2943 13 334
vennila 08-Jan 2683 40 180
karthickbharath01-Jan 3970 65 143
kaviK arasan 30-Jan 9213 124 136
saseesha 13-Jan 1687 33 132
raja1987 12-Jan 9291 107 122
Dinesh rak 01-Jan 9461 99 116
vellurraja 22-Jan 2750 57 108
a n naveen soft27-Jan 3681 81 89
karpagasri 08-Jan 603 4 87
manikandan 03-Jan 3922 66 85
abirekha 13-Jan 8893 243 83
harikaran 30-Jan 1352 12 61
ramyadarshini 26-Jan 1247 17 60
Shenbaga jagadeesan 01-Jan 2800 70 57
venkatesh 01-Jan 1651 20 51
mery jascinta 02-Jan 209 5 48
devirama 03-Jan 1478 21 44
raja.arp 16-Jan 1167 31 33
sugitha 16-Jan 638 6 30
priyasethu 20-Jan 385 3 26
tharanitharma 22-Jan 1163 13 17
nirmal kumar 02-Jan 1335 15 9
kppayya 19-Jan 2400 59 9
ilamparithi 02-Jan 1295 22 8
a velanganni 06-Jan 3028 85 5
புள்ளி விவரங்கள் சரி. எதற்காக இவை?
சற்றே விரிவாக பார்ப்போம்.
புதுவரவுகள் தொடர்கின்றன. அவற்றில் இளம் தலைமுறையினர் அதிகம் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.
புள்ளிவிவரங்கள் சொல்லும் சேதி:
புது வரவுகளும் அதிக ஆர்வத்துடன், அதிக பார்வையாளர்களுடன் உள்ளே நுழைகின்றனர்.
அதாவது அவர்களின் இணைய நட்பு அதிகமாகவே உள்ளது. அவர்களின் நட்பு இங்கே வேரூன்றும் முன்பே அவர்களின் படைப்புகளுக்கு கிடைக்கும் பார்வையும் தேர்வும் அதிகம் உள்ளன.
புது வரவுகளை தராசுத்தட்டில் நிறுத்த பழைய உறுப்பபினர்களின் தளத்தில் அன்றாட பங்கேற்பிற்கான புள்ளிவிவரங்களும் உள்ளன.
இங்குள்ள உறுப்பினர்களின் அன்றாட பங்கேற்பு அதிகம் இல்லாதபோது, இந்த புது வரவுகளுக்கு இத்தனை பார்வைகளும், தேர்வுகளும் எங்ஙனம் சாத்தியம்?
அது அவர்கள் கூடவே கொண்டு வரும் வட்டத்தின் வாடைக்காற்றே!
புதுவரவுகள் இங்கே தங்கள் படைப்புகளை பதிவு செய்ய, அவர்களின் வட்ட உறுப்பினர்கள் தொடர்கின்றனர் அவர்களின் படைப்புகளை.
பார்வை கூடுதலாகிறது. தேர்வுகளும் கூடுதலாகின்றன. தரம் இங்கு உணர்வுகளின் வெளிப்பாடுகள் என்பதாக மட்டுமே தராசுத் தட்டில் நிறுத்தப்படுகிறது. மனதிற்கு பிடித்து இருக்கிறது. தேர்வுகள் தொடர்கின்றன.
இதில் எங்கிருந்து வந்தது இலக்கியமும். இலக்கணமும்.?
இங்குள்ள தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (தளத்தின் ISO என்று தங்களை பறைசாற்றும் உள்ள்ங்கள்தான் அவை) ஸ்தம்பித்து நிற்க வேண்டிய நிர்பந்தங்கள்.
இங்கே இலக்கியமும் இலக்கணமும் தர நிர்ணயம் செய்யும் பிரிவாக செயல்பட எழுத்து.காம் என்ன உலகத் தமிழ் பல்கலைகழகத்தின் ஒரு கிளையா? அப்படி ஏதும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதா?
இது என்ன வசூல்ராஜாவின் பதிப்பெண் ஆராய்ச்சி கார்த்திகேயன் எப்படி இத்தனை புள்ளிகள் தேர்வு பெற்று முன்னணியில் வந்தார் என்பதாக?