கவிதைக்கு மெய்யும் அழகுதான் உன்னை பாடும் தருணம்



கம்பன் எழுதாத காவியமே!
பிரம்மன் தீட்டிய ஓவியமே !
அழகின் அரசியே !
செருக்கில் தேவதையே !
கார் மேகமும் உன் கூந்தலில் கவிபாடும் !
நிலவை களவாடிய நெற்றி !
அதில் இசைமீட்டும் புருவங்கள் !
வானவில்லுகோ ஏழு வர்ணம்!
அத்தனையும் உன் கண்களுக்குள் சரணம் !!!
ஏழு லோகமும் கண்டிராத காந்தம் !
உன் கண்களுக்குள் !
தன் இறகில் ஆயிரம் கண்கள்!
அழகானது அந்த மயில் !!!!
அடங்கியது அந்த அழகு !!!!
உன் ஒரு ஜோடி கண்களுக்குள் !
உன் மைதீட்டிய கண்கள்- இதயத்தை
கொள்ளைகொள்ளும்- களவாணி !!
அந்த காற்றும் காதல் செய்யும்
புல்லாங்குழள் மூக்கு !
சிகை அலை வீசும்
வலம்புரி சங்கடி - உன் காதுகள்!!!
மாங்கனி கன்னங்கள் !
அதில் முத்தமிடும் பருக்கள்!!!!.....
ரோஜாபூ உதடுகள் ! -அதில்
முத்து பதித்த பற்கள் !
சிந்தி விழும் தேன் சிரிப்பில் !!!
அங்கும் இங்கும் சில்லரையாக!!
சிதறிபோகும் என் இதயம்!!!
தாழம்பு கழுத்து !!! அதில்
தந்தம்போல் கைகள் !!!
பால் நெஞ்சம் ; அதில் பரந்த உள்ளம்
ஈகை என்றோர்க்கு !
அள்ளி தரும் விரல்கள் !!!
மடிப்புவிடும் இடையடி - அது...
குழந்தைகள் விளையாடும் சருகு மரம் .
என் சோர்வுக்கு சுகம் தரும் ,
கோவிலடி உந்தன் மடி !!
வாழைதண்டு கால்கள் !
பூமித்தாய்க்கு வலிதராத உன்
அடி பாதங்கள்!!!
வெற்றிலை கொடியடி - அது
தொட்டால் சிணுங்கும் உடம்படி !!!!
வள்ளுவனின் மூன்றுபாலும்
உன்னுள் அடக்கமடி !!!
பத்தினி தெய்வமடி நீ !!
என்னுள் தேன் மழையடி நீ !!
அன்பில் அன்னையாகவும் !!
அக்கரையில் தோழியாகவும்!
உன்னை பாடும்போது "இந்த வார்த்தைகளையும்
சிறை கொண்டதடி உன் இதழ்கலும்!! இமைகளும் "!
என்னை சிறை கொண்டதைப்போல்!!!!!!!..................

-இரா. அறிவுக்கரசு!!!!

எழுதியவர் : இரா. அறிவுக்கரசு (16-Nov-10, 3:50 pm)
பார்வை : 580

மேலே