வெட்கப்படுகிறது கவிதைகள் .....

உனக்கு காதல் பிடிக்குமா
கவிதை பிடிக்குமா என்று கேட்கிறாய் ,
உடனே உன் விழி பார்த்து ,
எனக்கு கவிதையாய் வாழ்கிற
காதலி உன்னைத்தான் பிடிக்கும்
என்கிறேன் நான் ...................

அக்கணம் ,
உன்னை போலவே
வெட்கப்பட ஆரம்பிக்கிறது
உன்னை பற்றிய
என் கவிதைகளெல்லாம் .........!!!!

சுரேஷ் மனோ

எழுதியவர் : (18-Feb-13, 6:27 pm)
பார்வை : 208

மேலே