உங்களுடன் ஒரு பகிர்வு.....! பொள்ளாச்சி அபி

வணக்கம் தோழர்களே.!
இந்த தளத்தில் ஆதலினால் காதலித்தேன் என்ற தொடரை எழுதி முடித்தபின்,உங்களில் பலபேர் எனது தொடருக்கு அளித்த ஆதரவும்.வாழ்த்தும் ..தொடர்ந்து அதனை எழுதி முடிக்க ஊன்றுகோலாய் இருந்தது.
இதன் தொடர்ச்சியாக..,நமது தோழர் அகனின் முன் முயற்ச்சியால்,அந்தத் தொடர் ஒரு புத்தகமாகவும் ஆக்கப் பட்டு.., நமது தளத்தில் இயங்கி வரும் கவிஞர்களின் தொகுப்பாக யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் '' என்ற நூலுடன் சேர்த்து. கடந்த சில வாரங்களுக்கு முன் சாகித்ய அகாடமி கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட,சாகித்ய அகாடமி எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெற்றுக் கொள்ள ..
என மிகச்சிறப்பாய் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது நீங்கள் அறிந்த செய்திதான்.!

தற்போது "ஆதலினால் காதலித்தேன்" நூல் அறிமுக விழா இதுவரை கோவை மற்றும் ஈரோடு மாவட்டம் பவானி, பவானி சாகர் ஆகிய பகுதிகளிலும்,தமிழ் நாடு முற்ப்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.மனிதநேயப் பண்பாட்டுக் கழகம் சார்பிலும் மிகச் சிறப்பாக நடை பெற்று முடிந்தது.
இதன் தொடர்ச்சியாக, சங்கமம் அமைப்பின் சார்பில்,வரும் மார்ச்.3.ஆம் தேதி ஞாயிறன்று காலை 10 மணியளவில்..,கோவை ஆர் எஸ்.புரம் புரந்தர தாசர் கலையரங்கத்தில் சாதிய எதிர்ப்புக் கருத்தரங்கம் மற்றும் முனைவர். ஜி.ஆர். ரவீந்திரநாத் எழுதிய "கலப்புமணம் பிரச்சினைகளும்-தீர்வுகளும்" எனும் நூல் மற்றும் ஆதலினால் காதலித்தேன் நூல் அறிமுகவிழாவும் நடைபெறவுள்ளன.
சாதி மதம் மறுப்பு திருமணம் செய்வதால்.மனித வாழ்க்கை ஒன்றும் சிதைந்து விடவில்லை என்பதை விளக்கும் வகையில் அதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஆதலினால் காதலித்தேன் நூல் அமைந்து விட்டதால்,இந்த நிகழ்ச்சியிலும் அதனை அறிமுகப் படுத்தப்படும் பெருமை எனக்கு கிட்டியுள்ளது. இந்த பெருமை தரும் மகிழ்ச்சியை நான் தங்கள் அனைவரோடும் பங்கிட்டுக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இவ் விழாவில் தோழர் புதுச்சேரி அகன் அவர்கள் ஆதலினால் காதலித்தேன் நூலினையும்,கலப்பு மணம் பிரச்சினைகளும் தீர்வுகளும் நூலினை ஜி.ஆர்.ரவீந்திரநாத் அவர்களும் அறிமுகம் செய்து பேசுகின்றனர்.

சென்னை பத்திரிகையாளர் திரு.ஞானி, மனித உரிமை செயற்பாட்டாளர் தோழியர் கல்கி சுப்ரமணியம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம்,தந்தை பெரியார் திராவிடர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உட்பட பலர் கருத்தரங்கில் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளனர்.

நேரில் வந்து தங்களை அழைக்க முடியாத நிலையில்,இம்மடலை தங்களுக்கு
வரைந்துள்ளேன். இதனையே அழைப்பாக ஏற்று அவசியம் தாங்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
மேலும் தங்கள் முகவரியை தனி விடுகையில் எனக்குத் தெரிவித்தால் அழைப்பிதழும் அனுப்பி வைக்கிறேன்.

என்னை இந்த நிலைக்கு உயர்த்திய உங்கள் அனைவருக்கும் .எழுத்து தளத்திற்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியும் வணக்கமும்
அன்புடன் பொள்ளாச்சி அபி.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (18-Feb-13, 10:26 pm)
பார்வை : 171

மேலே