ஊஞ்சலாடும் விவசாயியின் உயிர்
வானத்தின் மெத்தையில்
மேகத்தின் தேகமாய்
பெண்ணவள்.
தேகத்தின் மேலாடையோ
மோகத்தின் நூலாடை.
நூலாடை சேர்ந்திடும்
மெல்லிடையோ நிறம் சேரும்
பொன்வளைவு.
கணவனின் தோரணையில்
கதிரவன் கீற்றுகள்
காற்றெனும் விரல் கொண்டு
வீணையாய் மீட்டிட
மின்னல் இடியோசையும் கேட்டிட
ஊஞ்சலாடும்(குளம்) தொட்டிலும்
நிரம்பாதோ என
உயிர் வாழ ஊசலாடுகிறான்
என் விவசாயி
ஐஞ்சு வட்டி கந்து வட்டி
ஆர்பரிக்கும் இரயிலு வண்டி
போல் - நீளமாய் நிற்குதய்யா
ஏறிவிட்டு இறங்க(இறக்க)்முடியாமல் மனம் தவிக்குதய்யா
காட்டு வெள்ளமாய்
விலைவாசியும் ஏறுதய்யா
கடன் வாங்கியா சொந்தத்திற்கோ
காணி நிலம் மிஞ்சலய்யா
கஞ்சி குடிக்க வழியில்லாமல்
ஊஞ்சலாடுதய்யா - என்
விவசாயின் உயிர்.