புகைப்பழக்கத்தை கைவிட !?

படத்தில் நீங்கள் காண்பவை இரண்டுமே நுரையீரல்தான். சிகப்பாக இருப்பது புகைபிடிக்காத ஆளுடையது. கருப்பாக இருப்பது புகைப்பிடிக்கிறவருடையது.

(இதுமாதிரியான படங்களை பார்க்கும்போது உடனடியாக புகைபிடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று மனசு சொல்லும். ஆனால் அடுத்த ஒருமணிநேரத்திலேயே ஒரு தம்மடித்தால் தேவலாம் என்று மூளை சொல்லும். )

அண்மையில் என் நண்பர் ஒருவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஒருநாளைக்கு இருபது முப்பது சிகரெட்களை ஊதிதுள்ளுகிறவர். அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் வந்துவிட்டதாக டாக்டர் சொன்ன அடுத்த நொடியிலிருந்து புகைபிடிப்பதை நிறுத்திவிட்டார். அவர் புகைபிடிப்பதை நிறுத்திய பிறகுதான்.. போராட்டம் தொடங்கியது. அவர் நிம்மதியாக போய் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார். அவருடைய குடும்பம் பட்ட வேதனையை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

வீட்டின் ஒரே வருமானக்காரரான அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவருடைய மனைவி திண்டாடியதை பார்த்தபோது திக்கென்று இருந்தது.

புகைபழக்கத்தை கைவிடுவது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் முயற்சி செய்யுங்கள். உங்களுக்காக இல்லையென்றாலும் உங்கள் குடும்பத்தினருக்காக அதை செய்யலாம்.

http://www.mayoclinic.காம்/health/quit-smoking/MY00433 என்ற இந்த இணையப்பக்கத்தில் புகைப்பழக்கத்தை கைவிட எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றிப்பாருங்கள்.

எழுதியவர் : நான் படித்தது (20-Feb-13, 2:05 pm)
பார்வை : 294

மேலே