எழுத்து. 21

எழுத்து.

பூ என மணக்கும்,
தீ என எரிக்கும்,
வா என அழைக்கும்,
போ என துரத்தும்.
சீ என ஒதுக்கும்,
தூ என துப்பும்,
ஈ என பறக்கும்,
நீ என சுட்டும்,
சூ என அதட்டும்,
ஓரெழுத்தே இவ்வளவு
செய்தால்
நூரெழுத்தால் செய்த
கவிதை
என்னெவெல்லாம்
செய்ய வேண்டும்.
விதை நெல்லாய் விழுந்து
அறிவை விளைவிக்க வேண்டும்.
தீப்பொறியாய் விழுந்து
அறியாமையை
சுட்டெரிக்க வேண்டும்.
காதலை கற்றுக்
கொடுக்க வேண்டும்.
உயர்வை பெற்றுக்
கொடுக்க வேண்டும்.
கவிதை செய்ய வேண்டும்.
கவி விதையாய்
விதைக்க வேண்டும்,
ஏழைகள் வாழ்வில்
ஏற்றம் தர வேண்டும.
ஏய்ப்பவர் வாழ்வில் நல்ல
மாற்றம் வர வேண்டும். நாம்
எழுதுகின்றதும்,
படிக்கின்றதும்
படிப்பினை தரவேண்டும். ஒரு
படியாவது உயர்வினை
தந்தாகணும்.

எழுத்தால் ஏற்றம்
பெற வேண்டும். அல்லது

எழுதாமலாவது
இருக்கவேண்டும்.

எழுதியவர் : ஜே.ஜி. ரூபன். (20-Feb-13, 5:53 pm)
பார்வை : 120

மேலே