தம்பி..பாலச்சந்திரா -ஈழத்தின் மைந்தனே

தம்பி..பாலச்சந்திரா .

ஈழத்தின் மைந்தனே..
ஈடில்லா போராளியின்
பாலகனே..
வீர தாய் பெற்ற வீர
திருமகனே...
பிஞ்சு மொழி பேசும்
அஞ்சா நெஞ்சனின் வாரிசே..

எத்தனை கனவுகள் கண்டிருந்தாயோ ...
ஏக்கங்கள் கொண்டிருந்தாயோ...

கருவிலிருக்கும் தமிழனையே
அளிக்க நினைக்கும் சிங்களன்
உன்னை விட்டு வைப்பானா ..

உன்னை காப்பற்ற முடியவிலையே
இந்த நாதியற்ற தமிழர்களால்..

உன் இறப்பையும் வைத்து அரசியல்
செய்யும் ஈனப் பிறவிகள் இந்த
தமிழ் நட்டு அரசியல் வியாதிகள்...

உன் கண்களில் தெரிகிற ஏக்கம்
யாரும் காப்பற்ற வரமாட்டர்களா என்று...

ஆனால்..உன்னை காப்பற்ற இயலாத
கோழைகளாய் உன் அண்ணன்கள்
திராவிடத்தின் பிடியில் சிக்கி சீரழிகின்றோம் இங்கே..

ஒன்று மட்டும் நிச்சயம்...தம்பி..

இந்நேரம் ஈழ மண்ணில் பிறந்திருந்தால்
உனக்காக எங்கள் உயிரையும் கொடுத்திருப்போம்
என்று உரக்க கூற முடியும் எங்களால்..
வீர சாவை தலுவியிருப்போம் போராளியாய்
சரித்திரத்தில் இடம் பிடித்திருப்போம்...

ஆனால் இந்திய தமிழர்களாய் பிறந்து
திராவிடத்தின் பிடியில் தரித்திரமாய்
வாழ்ந்து கொண்டு இருகிரோமட..

முதலை கண்ணீர் விடுகிறான் ஒருவன்
தன்னை தமிழின தலைவன் என்று சொல்லி கொண்டு...

அறிக்கையை விடுகிறாள் ஒருத்தி
அரசியல் செய்வதற்காக மட்டும்....
மழுங்கடித்து போய்விட்டது இந்த மானங்கெட்ட
சில தமிழ் அரசியல் வாதிகளின் மனமும்....

விடுதலை வேண்டும்..தமிழ் ஈழத்திற்கு மட்டுமல்ல..
தமிழ் நாட்டிற்கும்...அது உன் மரணத்தின் மூலம்
நடக்கட்டும்...இனிமேலாவது உணர்வு பிறக்கட்டும்
எம் மக்களிடம்...

உன் உயிரை கொடுத்து கோடான கோடி மக்களிடம்
உணர்வை விதைத்து விட்ட வீரன் நீ..
தமிழினத்தின் சின்னம் நீயே...
தரணி போற்றட்டும் உன் புகழை...

வீர வணக்கம் செலுத்துவீர் தமிழர்களே...
ஈழ மண்ணில் விதைந்த இந்த வீர மைந்தனுக்கு....

வீர வணக்கம்...வீர வணக்கம்....என் தம்பி
பாலச்சந்திரனுக்கு வீர வணக்கம்... (கார்த்திக்)

எழுதியவர் : முகவை கார்த்திக் (23-Feb-13, 10:02 am)
சேர்த்தது : karthikboomi
பார்வை : 89

மேலே