அவள் நினைவாலே...!!!

முத்தம்
ஒன்று தந்துவிட்டு
என்னைத் தான்
நானும் மறந்தேனா
இல்லை
முந்தானையில்
முகம் துடைத்து
முகவுரை
தொலைத்தேனா...!!!

கள்ளத்தனமாக
கன்னம் வைத்து
கவிதை ஒன்று
வடிக்க வந்தேன்
உன்னை
கண்கள் முன்னே
கண்டவுடன்
எதையோ எண்ணி
நானும் மறந்தேன்
உன் நினைவின்
தாலாட்டில்
நானும் கொஞ்சம்
உறக்கம் கொண்டேன்...!!!

காற்று அடித்த
திசை தேடி
நானும் பயணம்
கொண்டேன்
உன் காலடி பட்ட
இடம் எல்லாம்
பூத்துக் குலுங்க
நானும் கண்டேன்
எனக்கும் வந்தது
நாணம் இன்று
அதனால் நானும்
கொஞ்சம்
மயக்கம் கொண்டேன்...!!!

ஊர் கூடி கும்மியடிக்க
உன் நினைவில்
நான் துடிக்க
நீ இன்றி
காலங்கள் ஓடுவதில்
என் உறக்கமும்
தொலைந்து போக
வாடுகின்றேன்
உன் வருகைக்காக
தினம் தினம் ஏதோ
சிந்தனை தொடர்வதால்
பாடுகின்றேன்
பைத்தியமாகவே...!!!

எழுதியவர் : கவிஞர் இராஜேந்திரகுமார் (24-Feb-13, 4:58 pm)
சேர்த்தது : rajendrakumar
பார்வை : 234

மேலே