ராஜா கைய வச்சா
ராஜா கைய வச்சா
குப்பை தொட்டி
பூ பூத்து
புன்னகைக்கும்
ராஜா கைய வச்சா
கழிவு நீரில்
கமலம் பூத்து
கமகமக்கும்
ராஜா கைய வச்சா
பனைமர பாடையும்
கள் அருந்தி
கவிதை உமிழும்
ராஜா கைய வச்சா
கிழிந்த கவிதை
தாளும் காற்றில்
பறந்து கோபுரம் ஏறும்
ராஜா கைய வச்சா
கருவேலங்காட்டு
கரிச்சான் குருவியும்
கவிதை பாடி
துணையை தேடும்
இவ்வளோ ஏங்க
கடவுளே இவர் எழுதுன
கவிதை காகிதத்தில்
கப்பல் செய்து
மழலையோடு விளையாடினார்
என்றால் பார்த்து கொள்ளுங்க
கவிதையின் கரு:கவிஞர் வெள்ளூர் ராஜா
நண்பன்டா........டாடாடாடா