நூலகம் ...
*கலைமகள்
விலை மகள் போல்
வேடம் போட்டாலும் ..
வந்து
கரம் பிடிக்க
ஆள் இல்லை
தமிழா ..
*அமுத சுரபிக்கே
அம்மா இவள் .
* கோடிகணக்கான
அறிவாளிகள்
தூங்கி விட்டார்கள்
எழுப்ப ஆள் இல்லாமல் .
*புத்தகத்தில்
ஒரே
ஒரு பக்கத்தை மட்டுமாவது
படித்து வையுங்கள் ..
மீதம் ...உங்கள் ..
வருங்காலம் வாசித்து விடும் .