பித்தாகிப்போனது மனம்
மழலையில் அன்னை மடியில்
மனம் பித்தானது ...
பத்தாம் அகவையில்
பள்ளியில் பிடித்த
சகாக்களோடு பித்தானது ...
என்றும் பதினாறு இனி
என்று வருமோ
என ஏக்கங்களில் பித்தானது ...
கல்லூரி வனத்தில் காதலில்
இதயம் பித்தானது ...
முப்பதுக்குள் மூப்பை நினைத்தும்
மூன்று முடிச்சை எண்ணியும்
மனம் பித்தானது ...
நாற்ப்பதுகளில் பிள்ளைகளின்
நம்பிக்கையில் பித்தானது ...
ஐம்பதில் ஆசை வெளிப்பட்டாலும்
அடக்குவதில் பித்தானது ...
அறுபதுகளில் ஆலய வழிபாடுகளிலும்
ஆசை துறப்பதிலும் பித்தானது ...
எழுபதிலிருந்து எமன் வரவை
எதிர்பார்த்து என் மனம் பித்தானது ...