மங்காத நிலவொளி

கடற்கரையில் நாம்
வறுத்த கடலையோடு
வாசித்த நாட்களை
வாழ்நாளில் மறக்க முடியுமா ?
பூங்காவில் பூத்த புது
மலராய் நீயும்
மங்காத நிலவொளியில்
மகாராசனாய் நானும்
மகிழ்ந்த நாட்கள் தான் மறக்குமா ?
காதலில் ஒன்றாக வீழ்ந்த நாம்
கல்யாணத்தில் பிரிந்ததேன்?
இதயத்தில் இருக்கும் நீ
பிரிந்தாலும் காதல் என்றும்
என்னை விட்டு பிரியாது ...

எழுதியவர் : (1-Mar-13, 12:04 pm)
பார்வை : 142

மேலே