உணவு மேசையில் ஓர் குரல்
என் உடலை
முழுதாக உண்டு விடுங்கள்
அப்படியேனும் என் பிறப்பிற்கு
அர்த்தம் கிடைக்கட்டும்
உறவைப் பிரித்து
உயிரைப் பறித்தீர்கள்
உடலைக் கிழித்து
குடலை எடுத்தீர்கள்
எரிதூள் தடவி
எண்ணையில் வறுத்தீர்கள்
அத்தனையும் பொறுத்தேன்
உங்கள் பசிதீர்க்க
முழுதாக என்னை உண்டுவிடுங்கள்
வலிதாகும் என் பிறப்பின் அர்த்தம்