என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் பகுதி -1
தன்னிகரில்லா தன் தனிப்பெரும்பான்மை
தகர்க்கபட்டுவிடுமோ ? எனும் தயக்கத்தினில்
கரும்பையும் தவிர அச்சிவெல்லத்தையும்
துணைக்கு கூட்டணியில் சேர்த்து
தேவ அமிர்தத்தின் தேசிய தலைமையினில்
தேர்தலில் உனை தோற்கடிக்க துடிக்கின்றது
உன் இனிமையில் மலைத்து போன மலைத்தேன்....
***************************************************************************
உச்சி நிலவின் உச்சக்குளிரழகு
நட்சத்திரங்களின் லட்ச பார்வைகள் ,
இதயம் வருடி,அதையே திருடிடும்
இனிமையான உன் நினைவு,
இவை,அத்தனையும் பொழுது புலர்ந்தும்கூட
தொடரச்செய்யும் தந்திரம் கொண்டது
உன் மந்திர புன்னகை ....
****************************************************************************
காதல் காதல் காதல்
காதலின் கண்ணியம் தனை
மேலும் கண்ணியம் செய்திடத்தானோ,
கனி கொஞ்சும் கன்னிக்கிளி
உன் அறிமுகம் எனக்கு ..