சமர்...அறிவி

நிலவென்பர் போதும்...
நிலம் கேள் !
மலரென்பர் போதும்...
முழம் போடு !
நதிஎன்பர் போதும்...
பின்னிருக்கும் அரசியல்
சதி உணர் !
கொள் என்பர்...
கொள்ளாதே கொல் !
அச்சம் மடம் நாணம்;
உடை உடுத்தென்பர்...
உடைத்தெறி !
சாதம் கேட்பர்...பதிலுக்கு
சதம் கேள் !
பார்த்து நட... சொல்வர்
நீ பார்த்து போ... சொல் !
தாலாட்டித் தாளிடுவர்...
தாழ் அகற்றத் தாளாற்று !
குயிலென்பர் நரியாகி...
கரையாதே ...கர்ஜி !
பிரித்தறி...
முடியாவிட்டால்...
பிய்த்தெறி !
திமிரென்பர்... இல்லை
திமிருக்கெதிரான சமர்... அறிவி!