என் உரிமைகளில் தீக்குளிப்பேன்
எனக்கான சுதந்திரம்
என்னை விட்டு
பிரிந்த போதே
என் தேசத்தின்
என் மீதிருந்த காதல்
என்
இதயத்தில் ஆழமாய்
மரணித்து கிடந்தது!
என் கால்தடத்தின்
எடை அதிகமானது!
மரித்துப் போன
மா யுத்தம்
மீண்டும் மீண்டும்
எல்லையின்
முடிவில் உயிர்ப்பித்து
கிடந்தது!
அன்று முதலே
எனக்கான சுதந்திரம்
என் மடியில்
இறந்து கிடந்தது!
எழுந்திட நினைக்கிறது
இன்னமும்...
எனக்கான சுதந்திரம்
தேடியே நானும்
எழுந்து எழுந்து
விழுகிறேன்
இன்னமும்.....
ஒருநாள் எழுந்து
நிற்பேன்!
என் உரிமைகளில்
தீக்குளிப்பேன்!
உயிர் துறக்க
மாட்டேன்!
ஒருமுறை யேனும்
சுதந்திரம் தாகம்
தீர்ப்பேன்!
அன்றே!
ஒரே முறையில்
உயிர் துறப்பேன்!