வாழ்கை தேடல்
வாழ்க்கையென்ற போதையினை அனுபவிக்க தெரியாத
அங்குமிங்கும் ஓடியாடி பாதையும் புரியாத
தினமருந்தும் புட்டியின் வாசனையும் மறவாத
வேசியின் உடல்சுகத்தில் இன்னமும் தெளியாத
தவறினை உணர்ந்தும் மனமேதும் வருந்தாத
மானிடப் பிண்டங்கள் வாழும் புவியினில்
வாழ்கையை தேடுவது நம்முடைய தவறன்றோ