நீர்
உழவனின் உயிர் கொடை
பசுமையின் பங்காளன்
புறத் தூய்மையின் பொக்கிஷம்
தாகத்தை களையும் தர்மச்சாலை
கொஞ்சி மகிழும் குழந்தைக்கு
குதுகளம் தரும் குற்றாலம்
வான் வயிற்றில் பிறந்து
புவியைத் தொட்டணைத்த
குளிர் மிகு குழந்தை நீ
ஆற்றில் உமது ஓட்டத்தை
தடுப்பாரில்லா விரைவு
ஓட்டப்பந்தைய வீரர் நீ
மலைதனில் சுனையாய்
குளத்தில் அமைதியின் பிறப்பிடமாய்
ஆழ்கடலில் ஆர்பரிக்கும்
அலைக்கு அகிலமே அடிபணியும் .
இளையகவி