இனியது...

குரலில் இனிய
குயிலதன்
வரவு கண்டேன் வெளியே-
உருவினில் சிறியது,
கறுமை நிறமது..
எனினும்
கருத்தில் நிறைந்தது அதன்
குரலே..

இனியது என்றும் இனியதே,
இனியதன்
பிறப்பை, உருவைப்
பார்ப்பது கொடியதே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Mar-13, 9:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே