தோழி

மனதார நேசிக்கிறேன் நான்
என் முகம் காணா தோழி அவளை....
குரலை கூட கேட்டதில்லை-ஆனால்
கூச்சல் இடுகிறாள் என்னில் நித்தமும்.....
கனவுகளில் வருகிறாள்....
பல கதைகள் சொல்லி செல்கிறாள்....
நினைவுகளாய் வந்து என்
நித்திரை பறித்து செல்கிறாள்..

என்னுள் நிறைய மாற்றங்கள்...
என் மனதில் பல ஏக்கங்கள்..
பகல் முழுவதும் பேசுகிறேன்..
பகலவன் மறைவதும் தெரியாமல்.
இரவு முழுவதும் பேசுகிறேன்..
விடியல் வருவதையும் அறியாமல்..
எல்லாம் கனவினில்....
எப்பொழுது நினைவினில்....
என் தனிமை நேரங்களில்...
தழுவி கொள்கிறாள்...

விழிகளில் ஏக்கம்...
விரல்களில் நடுக்கம்..
முகத்தில் வெட்கம்..
அந்த முதல் நாள்
சந்திப்பு எப்போது......

யார் நீ? என்ன உறவு........
தெரியபடுத்தி விடு......
தெளிந்து விடுகிறேன் நான்......
அன்பாய் பேசி என்னை ஆக்கிரமித்ததேன்...
சிறுவனாகிய என்னை சிறைபடுத்தியதேன்.....
என் சிந்தனை முழுவதும் உன் வசமே...
யார் நீ அறியவில்லை.....
என் வாழ்க்கையே நீதானோ புரியவில்லை.....
பெண்ணே வேண்டாம் இந்த
கண்ணா மூச்சி ஆட்டம்
போதும் என் உயிர் படும் திண்டாட்டம் ....

வந்து விடு என் முன்னில்.....
தந்து விடு உன்னை என்னில்....

எழுதியவர் : முகவை கார்த்திக் (7-Mar-13, 3:48 pm)
Tanglish : thozhi
பார்வை : 187

மேலே