தீபாவளி

தீபாவளி எனும்
பண்டிகையாம்
அது ......
தீபஒளி சூழும்
பண்டிகையாம்!

மாபாதகன் அந்த
நரகன்தனை
அன்று .........
மாயவன் மாய்த்த
மகிழ்வுடை நாள் !

மத்தாப்புக்குச்சி
உமிழ்ந்துவிடும்
பல .......
மங்கா ஒளிப்பொறி
பேசுது காண்!

மத்துன் தயிரெனக்
கலக்கமுறும்
இந்த ............
மானுடம் நன்கு
தெளிவு பெறும்!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Mar-13, 12:24 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 71

மேலே