காதல் தோல்வி................!!

உன் பாத சுவடு ஒற்றி
நடக்கிறேன்,சிறு குழந்தை போலவே.

உன் பாத மண்துகள்களை
சேமிக்கிறேன்.

நடந்து பழகும் சிறு
குழந்தையின் லாவகத்தோடு
உன் பாத தடங்களில்
என் பாதங்களை பதிக்கிறேன்.

காற்று கொண்டு வந்த
மண்ணின் துகள்கள்
என் விழி நிறைத்தாலும் ,
கண்ணீர் வரவில்லை

உன் பாத சுவடின்
மண்துகள்கள் என்பதால் ..........................................!!

எழுதியவர் : messersuresh (9-Mar-13, 12:45 pm)
பார்வை : 753

மேலே